கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழையால்-வெள்ளத்தில் மிதக்கும் 7 மாவட்டங்கள்!!! - தமிழ் துளி

Breaking

Thursday, 9 August 2018

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழையால்-வெள்ளத்தில் மிதக்கும் 7 மாவட்டங்கள்!!!


கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழையால், இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளநீர் செல்ல வழியில்லாததால் ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.


வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்த மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். வயநாடு, கோழிக்கோட்டில் தீயணைப்பு வீரர்களுடன், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஹெலிகாப்டர்கள் மூலமும் மீட்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.மாநிலத்தில் உள்ள 24 அணைகளில் இருந்தும் உபரிநீரைத் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. 26 ஆண்டுகளில் முதன்முறையாக இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய விடுக்கப்பட்டுள்ளது.


கேரளாவில் மழைக்குப் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாலும், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாலும் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

No comments:

Post a Comment

adsense