திருமணத்திற்காக ATM உடைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் மூன்று மாதங்களின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.!! - தமிழ் துளி

Breaking

Thursday, 9 August 2018

திருமணத்திற்காக ATM உடைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் மூன்று மாதங்களின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.!!

திருமணத்திற்காக வங்கியிலிருந்த தன்னியக்க பண பறிமாற்ற இயந்திரத்தை உடைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் மூன்று மாதங்களின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க பண பறிமாற்ற இயந்திரத்தில் பணத்தை கொள்ளையிட்ட போது, இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் கடந்த மூன்று மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர்களை முன்னிலைப்படுத்திய போது 15 லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரின் திருமண நிகழ்வை ஏற்பாடு செய்வதற்காக பணம் இல்லாமையினால் கொள்ளையில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதற்காக ஏரிஎம் இயந்திரத்தை உடைத்து 47 லட்சத்து 70 ஆயிரம் ரூபா பணத்தை அவர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.
பிணையில் விடுவிக்கப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், நீர்கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

adsense