வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இராணுவத் தளபதி அழைப்பு!! - Tamil Thuli

Breaking

Thursday, 9 August 2018

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இராணுவத் தளபதி அழைப்பு!!



உள்ளூர் செய்திகள்:வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க நேற்று(07) அழைப்பு விடுத்தார்.

இராணுவம் தொடர்பில் தமிழர்களிடையே நிலவும் சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக 2009 இல் யுத்தம் முடிவடைந்தது முதல் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுடன் இலங்கை இராணுவம் மிக நெருக்கத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கை இராணுவத்தின் இச்செய்தி இம்மாத இறுதியில் நடத்தப்படவுள்ள ‘கொழும்பு பாதுகாப்பு செயலமர்வு 2018’ இன் மூலம் தமிழ் டயஸ்போராவை சென்றடையுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.


‘கொழும்பு பாதுகாப்பு செயலமர்வு 2018’ தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் இராணுவத் தளபதி தலைமையில் கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது கேள்வி நேரத்தில் ஊடகவியலாளர்கள் முன்வைத்த வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்

No comments:

Post a Comment

adsense