யாழ்ப்பாணம் நாவற்குழி சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு நிவாரணம் தேவை! நாடாளுமன்றில் சுமந்திரன்!!!! - தமிழ் துளி

Breaking

Thursday, 9 August 2018

யாழ்ப்பாணம் நாவற்குழி சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு நிவாரணம் தேவை! நாடாளுமன்றில் சுமந்திரன்!!!!


யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் சட்டவிரோதமாக தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் தங்க வைக்கப்பட்டுள்ள 107 குடும்பங்கள் வெளியேற்றப்படுவதாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்..-
நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போது வீடமைப்பு அமைச்சர் சஜீத் பிரேமதாசவிடம் இவ்வாறு எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை கையகப்படுத்தி குறித்த 107 குடும்பங்களும் தங்கியுள்ளன.
தற்போது அந்த குடும்பங்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்வதுடன், அதுதொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
மிகவும் எளிமையான அவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றாமல், அவர்களுக்கான நிவாரணத்தை வழங்குமாறு சுமந்திரன், அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் சஜித், வெளியேற்றல் நிகழவில்லை என்றும், நிர்மாணப்பணிகளே இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டதோடு, இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினத்துக்குள் ஆய்வு செய்து தீர்வை வழங்குவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

adsense