யாழ்ப்பாணத்தில் இரண்டு இளைஞர்கள்! ஹெரோயின் போதை பொருளை... - தமிழ் துளி

Breaking

Thursday, 6 September 2018

யாழ்ப்பாணத்தில் இரண்டு இளைஞர்கள்! ஹெரோயின் போதை பொருளை...

யாழ்ப்பாணத்தில் இரண்டு இளைஞர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 24 மற்றும் 27 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 282 மில்லிக்கிராம் ஹெரோயின் போதை பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலையே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

adsense