அபிராமிக்கு ஜெயிலில் நடந்த கொடூரம் : சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்!! - தமிழ் துளி

Breaking

Friday, 7 September 2018

அபிராமிக்கு ஜெயிலில் நடந்த கொடூரம் : சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்!!சென்னை குன்றத்தூர் அருகே 3-ம் கட்டளையை சேர்ந்தவர் வங்கி ஊழியர் விஜய், அவரது மனைவி அபிராமி பிரியாணிக்காரனுடன் ஏற்பட்ட முறையற்ற உறவால் தன் குழந்தைகளை இழந்து, தன் குடும்பத்தை இழந்து புழல் சிறையில் உள்ளார்.

நாகர்கோவிலில் கைது செய்யப்பட்ட அபிராமி தீவிர விசாரணைக்கு பிறகு சென்னை புழலில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். 3 பெண்கள் தங்கக்கூடிய அந்த சிறை அறையில் முதல் நாளில் இருந்து சரியாக சாப்பிடாமலும், தூங்காமலும் அபிராமி இருந்துள்ளார். சாப்பிடுவதற்கு அழைத்து சென்றால் அங்கு கூட்டம் கூட்டமாக வந்து சக கைதிகள் வேடிக்கை பார்த்தார்களாம். அந்த அளவிற்கு ஜெயிலில் அபிராமி பிரபலமாகியுள்ளார்.

இந்த நிலையில் தான் நேற்று மாலை அபிராமி திடீரென மயக்கமாகியுள்ளார். பின்னர் சிறை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளாராம்.
தொடர்ந்து உணவு எடுக்காததும், தவறின் விரீயம் என்ன என்று கூட புரியமால், காமமோகத்தால் செய்துவிட்டு அது கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து வருவதில் தாக்கம் தான் தற்போதைய மன அழுத்ததிற்கு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

No comments:

Post a Comment

adsense