ஊசி மூலமாக பால் பக்கெட்டில் எதையோ கலந்து கொடுத்துள்ளனர்--விமல் வீரவன்ச - தமிழ் துளி

Breaking

Friday, 7 September 2018

ஊசி மூலமாக பால் பக்கெட்டில் எதையோ கலந்து கொடுத்துள்ளனர்--விமல் வீரவன்ச


பொது எதிரணியின் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பால் பக்கெட்டில் இன்ஜெக்ஷன் ஊசி மூலமாக எதையோ கலந்து கொடுத்துள்ளனர். முஜிபூர் ரஹ்மானே இதற்குக் காரணம், அதுவே எமது போராட்டம் சிதைவடையவும் காரணம் என பொது எதிரணி பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியது. 

பாராளுமன்றத்தில் இன்று கணக்காய்வாளர் தலைமை அதிகாரியின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் பொது எதிரணி உறுப்பினர் விமல் வீரவன்ச, கடந்த ஐந்தாம் திகதி பொது எதிரணி நடத்திய வெற்றிகரமான பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு மாளிகாவத்தை பகுதியில் அரசியல்வதியின் ஆதரவாளர்கள் சிலர் மூலமாக பால் பக்கெட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த பால் பக்கெட்டுக்களில் இன்ஜெக்ஷன் ஊசி மூலமாக எதோ கலக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதனை பருகிய எமது ஆதரவாளர்கள் வைத்தியசாலைகளிலும் உள்ளனர். அரசாங்கம் மிகவும் மோசமான வகையில் இவற்றை செய்துள்ளது என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

adsense