ஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் மூவர்.....! - தமிழ் துளி

Breaking

Thursday, 6 September 2018

ஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் மூவர்.....!

 

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் உள்ள 2 வீடுகளில் இன்று(06) அதிகாலை ஆவா குழுவினர் வாள்களுடன் சென்று வீட்டினை சேதப்படுத்தியதுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் ஏனைய பொருட்களையும் அடித்து நொறுக்கியதுடன், வீட்டில் இருந்தவர்களையும் வாளால் வெட்டியுள்ளனர்.
ஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் மூவர் படுகாயம்…
இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் வேலுப்பிள்ளை செல்வராசா (வயது 70) உட்பட செல்வராசா சஜீபன் (வயது 25) ஆகியோருடன் அயல் வீட்டுக்காரப் பெண்மணி பாலேந்திரன் சரோஜினிதேவி (வயது 61) ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

adsense